Thursday, December 3, 2009

இரண்டு கடிதங்கள்

கடிதம்:1 சிவகாமியடமிருந்து
இலக்கிய நல்லூழ்
வணக்கம் திரு.சோ.சுப்பு ராஜ்..
"சுஜாதா சொன்னது போல.. இணையம் ஒரு கங்கை ஆறு போல,அசுத்துங்களை நீக்கி புனிதங்களை பார்ப்பதே சமகால தேவை" என்ற வார்த்தைக்கு உங்களின் வலை தளமும் பொருத்தமான சான்று..,தங்களின் சிறுகதைகளை ஒரே நேரம் வாசித்தேன்.. சிறந்த சிறுகதைகள் அனைத்தும்..
"நிலமென்னும் நல்லாள்" என்னை மிகவும் பாதித்த சிறுகதை..
சமகால பிரச்சினைகளின் பட்டவர்த்தனமான உண்மைகள் பளிச்சிடும் கருத்து..
“எல்லாத்தையும் வித்திட்டீகளே சாமி, இனிமே இந்தப் பக்கமே வரமாட்டீகளா”
என்னை பல நிலை நோக்கி நகர்த்திய வரிகள்..
தங்களின் வலை தளத்தை இத்தனை நாள் தவறவிட்டது எனது கவனக்குறைவு..
திரு.ஜெயமோகனின் அறிமுகத்தால் கிடைத்த மற்றுமொரு அற்புதம்.
தங்களின் இலக்கிய பணி தொடர வாழ்த்துகள்..
சில்வியா பிளாத்தின் நினைவாக வைக்கபட்ட பெயரே வசீகரம்... இல்லை வேறு காரணம் உள்ளதா?
அன்புடன் சிவகாமி..மனநல மருத்துவர் திருச்சி..

அன்புள்ள சிவகாமி,
வணக்கம். சந்தோஷமாக இருக்கிறது உங்கள் மின்மடல் பார்த்ததில். என்னுடைய வலைப் பதிவை வாசித்து நீங்கள் தான் எனக்கு முதன் முதலில் அதுவும் தமிழில் மின் மடல் அனுப்பியிருக்கிறீர்கள். சிறுகதைகள் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!
உங்களின் எண்ணம் மிகச் சரியே! சில்வியா பிளாத் என்கிற கவிஞரின் பெயரால் வசீகரிக்கப் பட்டு முதலில் என்னுடைய பெண்ணிற்கு சில்வியா என்று பெயரிட்டேன். அந்தப் பெயருடன் என் மனைவி பெயரின் முதல் பகுதியையும் இணைத்து பிளாக்கிற்கு பெயரிட்டேன்.தொடர்ந்து எழுதுங்கள்!
மீண்டும் நன்றிகள்!
அன்புடன்
சோ.சுப்புராஜ்

கடிதம்:2 காளிராஜிடமிருந்து
Dear Mr. Subburaj,

I'm Kaliraj working in a electronics industry in chennai, after completing my M.Tech in Madras Institute of Tech. I just came thro' your web while reading Jeymohan's web. I've not yet gone thro' your web completly. Just after reading your profile, with enthusiasm i'm sending this mail. By the way, I also belongs to Virudhunagar Dt (Sankaralingapuram). Now you should understand why i'm writing this. Let me completly go thro' your web & Share my thoughts.Thanks & Regards,
Kali
அன்புள்ள காளிராஜ்,
வணக்கம். உங்கள் மின் மடலுக்கு அனேக நன்றிகள்!
என்னுடைய வலைப் பதிவை வாசித்ததும் உங்களின் மேலான கருத்துக்களை மறக்காமல் எனக்குத் தெரிவியுங்கள். உங்களின் பெயரிலேயே நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் பால்ய நண்பனொருவன் இருந்தான். கால ஓட்டத்தில் அவர்களின் குடும்பம் கன்னிசேரிக்குக் குடி போனது. கொஞ்ச நாட்களுக்குக் கடிதத் தொடர்பிருந்தது. அப்புறம் தொடர்பற்றுப் போகினோம். உங்களின் பெயரில் மின்மடலைப் பார்த்ததும் அவன் தானோ என்று அவசரமாய் கிளிக் பண்ணினேன். பரவாயில்லை; உங்களின் மின்மடல் என்னுடைய பால்ய நினைவுகளை அசை போட வைத்து விட்டது. நன்றி!
அன்புடன்
சோ.சுப்புராஜ்

No comments:

Post a Comment