அன்புள்ள சாரு,
வணக்கம். என் பெயர் சோ.சுப்புராஜ். இணையத்தில் நீங்கள் எழுதுபவைகளை ஒன்று விடாமல் வாசித்து விடுகிற வாசகன். இன்றைக்கு உங்களின் வாசகர் கடிதங்களுக்கு பதில் எழுதும் போது குங்குமம் உங்களை அவமானப் படுத்தி விட்டதாகவும் அந்தப் பத்திரிக்கை சில மளிகைப் பொருட்களுடன் தன்னுடைய பிரதிகளையும் வினியோகித்தது என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள்; அதை நான் மிகவும் ரசித்தேன். நான் கூட அந்த இலவச விநியோகங்களைப் பற்றி ஒரு கவிதை எழுதி, அது 2006ம் வருஷத்தில் கீற்று மற்றும் திண்ணை இணைய இதழ்களில் பிரசுரமாகி இருந்தது. அந்தக் கவிதை உங்களின் நகைச் சுவையை வாசித்ததும் ஞாபகத்திற்கு வந்தது.
அந்தக் கவிதையை கீழே தருகிறேன். நீங்களும் வாசித்துப் பாருங்கள்.
இலவசங்கள்
சமைக்க மசாலாக்கள்
சல்லாபிக்க காண்டம்கள்
சருமத்திற்கு களிம்புகள்
முகத்திற்கு பௌடர்
முலை வளர மூலிகைகள்
குளிக்க சோப் மற்றும் ஷாம்ப்புகள்
பற்பசைகள்; தலைவலித் தைலங்கள்
மகளிரின் மாதப் பிரச்சினைகளூக்கும்
தீட்டுத் துணி பொட்டலங்கள்;
இன்னும் என்னென்னெவோ
எல்லாம் கிடைக்கும்
எங்கே? புத்தகக் கடைகளில்; அதுவும்
குறைந்த விலைகளில் கூடவே
மெலிந்த தமிழிதழ் ஒன்றும்
தருவார்கள் இலவசமாய்.....
வாசிக்க ஒன்றும் தேறாது; ஆயினும்
வாங்கி வர மறக்காதீர்கள்
குழந்தைகளின் மலந்துடைத்து
குப்பையில் வீச
உதவும் உத்திரவாதமாய்.......!
அன்புடன்
சோ.சுப்புராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
சில்வியா உங்கள் மடலில் இருந்து நான் முற்றும் மாறுபடுகிறேன். சாருவிற்கு இப்போது தான் இந்த பத்திரிக்கைகள் மளிகை கடை பொருட்களை இலவசமாய் தருவது பற்றி தெரியுமா? பல முறை அவர் தமிழ் வணிக பத்திரிக்கைகளுக்கு கதை எழுதி உள்ளார். அப்போதெல்லாம் தெரியவில்லையா? ஷாம்பூகளோடு அவரது கதை ஒட்டி கொண்டு போந்து பற்றி அவருக்கு தெரியவே தெரியாதா.. அதையும் குழந்தைகள் மலம் துடைத்து வீச உபயோகப்படுத்தி இருக்கலாம்.
ReplyDeleteஎன் மறுப்பிற்கு மன்னிக்கவும். தன் சூழ்நிலைக்கு ஏற்ப விமர்சனங்களையும் செயல்பாடுகளையும் மாற்றி கொள்ளுதல் எந்த வகையில் நியாயம் சொல்லுங்கள்?
அன்புள்ள ராஜரத்தினம்,
ReplyDeleteஉங்களின் கருத்துக்கு நன்றி! சாருவின் எல்லா வகையான எழுத்துக்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஆராதிப்பவன் அல்ல நான்.இந்தக் கடிதம் அவருக்கு வக்காலத்து வாங்கவும் எழுதப்பட்டதல்ல; அவர் குங்குமம் பத்திரிக்கை பற்றி உதிர்த்த ஒரு சொற்றொடொர் நானெழுதிய ஒரு பழைய கவிதையை ஞாபகப் படுத்தவே அந்தக் கவிதையை அவருடன் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான்.அந்தக் கவிதையை என் வாசகர்களுக்கும் பரிமாறவே அந்தக் கடிதத்தையும் இணையத்தில் வெளியிட்டேன். உங்களின் மறுப்பை நான் மிகவும் ரசிக்கிறேன். இந்த மாதிரியான விமர்சனரீதியிலான விவாதங்களையும் கருத்துக்களையுமே நான் வரவேற்கிறேன். வெறுமனே நன்றாக இருந்தது; சூப்பர் மாதிரியான கருத்துக்களை சரி நம்முடைய படைப்பு வாசிக்கப் பட்டிருக்கிறது என்ற அளவில் மட்டுமே பொருட்படுத்துகிறேன்