Tuesday, November 1, 2011

கவிதை:காத்திருப்பு

வெகு நேரமாயிற்று விமானம் தரை இறங்கி......
விடைபெற்றுப் போயினர்
உடன் பயணித்தவர்கள் யாவரும்;
வெறிச்சோடிக் கிடக்கிறது விமான நிலையம்;
அடுத்த விமானத்திற்கு இன்னும்
அவகாசமிருப்பதால்......

அலைபாயும் கண்களுடன் காத்திருக்கிறார்
அழைத்துப் போக யாரும் வராத
அவஸ்தைகளை விழிகளில் தேக்கி
சக்கர நாற்காலியில் ஒரு முதியவர்!